விடையில்லாமல் போனது பல கேள்விகள் 555

***விடையில்லாமல் போனது பல கேள்விகள் 555 ***


வாழ்க்கை...


கண்களில்
வழியும் கண்ணீரும்...

விண்ணில் வந்து
செல்லும் வானவில்லும்...

எப்போதும் சுகம்தான்...

கடலில் உருவாகும்
உப்பு நன்னீரில் கரைகிறது...

விழிகளில் உருவாகும் உப்புநீர்
தலையணையில் கரைகிறது...

வாழ்க்கை பாடம்
அவமானத்தில் கற்றுக்கொண்டேன்...

அன்பின் பாடம் நிராகரிப்பில்
கற்று கொண்டேன்...

விடையில்லாமல் போனது
என்னில் எழும் கேள்விகள்...

இருளில்
நான் முடங்கிப்போனதால்...

இனி இழப்பத்திற்கு
என்னிடம் ஏதும் இல்லை...

பலமுறை
இடறி விழுந்தும்...

நான் என் பாதையை
மாற்றி கொண்டதில்லை...

வாழும்போது
எப்படி வாழ்ந்தாலும்...

யாருமற்ற காட்டில்
உறங்குவோம் இறுதியில்.....


***முதல் பூ பெ.மணி....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Jun-21, 5:00 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 155

மேலே