பாவை அவளின் பால்முகம்

வெள்ளி நிலவே வெளியில் வந்துவிடு
வந்து எனக்கொரு விடையை தந்துவிடு
அள்ளி பருகிடமாட்டேன் உன் அழகை
அல்லிசூழ் குளத்தில் சிறையிட மாட்டேன்

வா...வந்து விடு பால்வீதியை விட்டு விலகி
இந்த பாமரனுக்கு ஒரு பதிலை தந்து விடு
நீலவானம்தன் பின்தான் நில்லாதே நின்று
பின் யெனை எட்டியெட்டி பார்க்காதே

வெண் முகிலின் மஞ்சனையில் துயில் கொண்டது போதும்...கார்வண்ணனை காதலித்தும் போதும்...காத்துகிடைக்கேன்
கருணை இலையோ பகல்நிலவே

உன்னிடம் ஒரு கேள்விதானே கேட்டேன் அதற்குள் ஓடி ஒளிந்து கொள்வது ஏனோ
வட்டமுகம் உனக்குவடிவாய் அமைந்தது எப்படி ? என ...ஏனிந்த தயக்கமும் மயக்கம்

ராணிதானேநீ நாணிசெல்வது முறையா ?
நாணல்போல் வளைந்துபோவது வழியா ?
இரகசியத்தை என்செவிக்கு மட்டும் சொல்லிவிடு யென்இதயத்தை இரவல் பெற்றவளை இமைநொடி கண்டேனென

நான் கண்டவளின் வட்டமுக அழகே
உன் வடிவுக்கும் அழகாக ஆனதென்று... பாவைஅவளின் பால்முகம் கண்டே பெளர்ணமியில் ஒளிர்ந்தேன் என

பிறைநிலவாக பித்தலாட்டம் காட்டியது
என்னவளின் புருவ நெற்றி பார்த்தே என
மாலை மஞ்சள்நிலவாக மயக்கியதெல்லாம் கொஞ்சுமஞ்சள் பூசிய குமரியின் சாயல்தானென

நாணிசென்றதும் ஓடிஒளிந்ததும் என்நாயகின் நளினம் கண்டே என
உண்மையை சொல்லிவிடு உனக்கும் உண்டு ஓரிடம் மெய்ஞ்ஞான உலகில்

வான்நிலவே வா வந்து உன்பதிலை தா
வீசியஎன் கேள்விகணைக்கு... அல்லநான்
எழுப்பிய வேள்வித்தீயில் இறங்கிவிடு
இன்னுமொரு பத்தினியாய்

எழுதியவர் : பாளை பாண்டி (14-Jun-21, 1:29 pm)
பார்வை : 350

மேலே