இன்றைய இந்தியப் பெண் ஒரு கற்பனையும் உண்மையும்

பொட்டிட்ட நுதலுக்கு அழகு தனியே
கட்டிய கூந்தலுக்கு மல்லிப்பூ சரம்போல
சந்தன மரத்தில் செதுக்கிய சிலையாம்
கட்டுடலை கஞ்சிப் பட்டு சீலையில்
லகுவாய்ப் போர்த்திய உந்தன் ஆடை
அணிவதில் இலக்கிய அலங்காரம் தனிஅழகு
செவ்விதழில் நீ தரும் புன்னகை அழகு
செவ்வாய் மலர்ந்து நீ பேசும்
தமிழ் மொழி அழகு என்றெல்லாம்
நான் எழுதுவதெல்லாம் எங்கே வெறும்
கற்பனையாய் மட்டுமே இருந்துவிடுமா
என்று மனம் வெதும்பும் நான் இங்கே
இன்றைய இளம் மங்கையர் நம்
இந்தியா மகளிர் நெற்றியில் பொட்டு இல்லை
கூந்தலோ கட்டுக்கடங்காது காற்றில் ஆடுது
குலுங்கும் இளமையை கட்டுக்குள் வைக்க
சேலையூடுத்த தயங்கும் இவர் மேற்கத்திய
ஆடை அலங்காரத்தில் மோகம் கொண்டு
தம் தாய் மொழியில் பேசுவதையே இழுக்கென்று
ஆங்கிலத்தில் புலம்புவது ஏன்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Jun-21, 2:41 pm)
பார்வை : 38

மேலே