நிரந்தரமாய் மீண்டும் சமாதியாகிறோம்
ஈர புழுதியிலே இடைவிடாது ஓடுகிறது எங்களின் ஈழச் செங்குருதி,
நாளை விடிந்திடுமா இல்லை என் நாடி அடங்கிடுமா என ஏங்குது அதைக் கருதி,
வாழ வழி தேடி அலைந்ததினால் எனை வானிலிருந்து இறக்கி விட்டாய் இங்கே,
நான் உயிரோடு வாழ்வதற்கு நல்ல சாதகமான வழிதான் எங்கே,
படைத்து விட்டாய் இலங்கையிலே என் பாவக்கணக்கின் அடிப்படையில்,
அந்த பாவங்களை குறைத்திடவா இடம் கொடுத்தாய் இந்த பாவிகளின் நிழறகுடையில்,
இம்மண்ணில் புதைந்திடவா படைத்து விட்டாய் ஆம் உரமானோம்,
தமிழ் மண்ணை நேசித்ததால் இங்கே பாவப்பட்ட உயிரானோம்,
மறுநாள் விடியுமென்றே பதுக்குழியில் தூங்குகிறோம்,,
விடிந்து விட்டால் இரவு எப்போது வருமென்று ஏங்குகிறோம்,
பயித்தியகாரர்கள் விடியலைத் தேடி அலைந்திடும் விட்டில் பூச்சியாய்,
இம்மண்ணில் நிரந்தரமாய் மீண்டும் சமாதியாகிறோம்.

