முள்ளிவாய்க்கால் இன படுகொலை

துரோகிகளின் செயல்பட்டால் தாய் மண்ணிலேயே
செத்து மடிந்தன தமிழ் உயிர்கள்...................
.தொடர்ந்து அடுத்தடுத்து வீசப்பட்ட
குண்டுகளால் அப்பாவி குழந்தைகள்
எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதந்தன...............
.கூடவேய் இருந்தும் நம்மால் காப்பாற்ற
முடிய வில்லையே என்று கதறி அழுதோம் துடித்தோம்..............
கேட்க ஆள் இல்லாமல் துடிதுடித்த வேலையில் ............
ஊமையாகின சர்வதேச நாடுகள், போலியாகிப்போனது
மனித நேயம், அருகில் உள்ள அணைத்து நாடுகளும்
கைகட்டி வேடிக்கை பார்த்தன...........
.கயவர்களும், குள்ள நரிகளும், கழுகுகளும் வட்டமிட ....
உரிமை கேட்டு உயிரய் கொடுத்து ஏழுந்து நின்ற போராட்டம்.....
நம் கூடவேய் இருந்த சகமனிதர்கள் குழிபறித்ததால்..........
முள்ளிவாய்க்கால் ரத்த வெள்ளத்தில் பூமி தாய்
மடியில் புத்தியுண்டு போனது.......
புதைந்தோம் ஆனால் மீண்டும் எழுவோம்
பீனிக்ஸ் பறவையாய் மடிந்த அத்தேய் மண்ணில்..
.சிரிக்கும் வண்ண பூக்கள்..சுதந்திர காற்றில்
உங்கள் தாய் மண் நிச்சயம் ஒரு நாள் நீராடும்
அப்போது ஓங்கி உரைப்போம் இந்த உலகிற்கு
நம் தலைவனும், தமிழ் வீரர்களும், தமிழ் இனமும்
கண்ட கனவு பலித்ததென்று….
கண்டிப்பாக ஒருநாள் தமிழ் ஈழம் உதயமாகும்..
முள்ளிவாய்க்கால் இன படுகொலை
அனைத்து தமிழ் இனத்தின் மனதில் பதிந்த அழியா வடு.

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Jun-21, 3:31 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே