என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு

வைரஸ் செயலைக் கண்டு, மக்களே
மார்பு துடிக்குதுங்க! எந்த நோயானாலும் கரோனாவைப் போலத் தெரியுதங்க!

என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு
என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு
இப்போது நீ போடும் ஆட்டம் அத்து மீறி போயாச்சு!
என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு?
இப்போது நீ போடும் ஆட்டம் அத்து மீறி போயாச்சு!
(என்னடா கரோனா)

1. போன வருடம் எங்களை நீ தாக்கினாய்
இன்னும் கொடுமை செய்கிறாய் அரக்கனாய்!,( இரண்டு முறை)

நெஞ்சம் துடிக்குதே போ நீ
நீயோ வெளி நாட்டு போணி
எம்மை சாக அடிப்பதும் ஞாயமோ
எங்கள் தேசத்தில் உள்ள செழிப்பினை விஷக் கிருமி நீதான் அழிக்கிறாய்!
சில பேர் மடிகிறார் பல பேர் துடிக்கிறார்
(ஏய் கரோனா கயவனே!)

என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு?
இப்போது நீ போடும் ஆட்டம் அத்து மீறி போயாச்சு!
*****************
2. இனியும் செல்லாது உன் ஆணவம்
இப்போ போடுறோம் ருத்ர தாண்டவம்
(இரண்டு முறை)
உன்னை அனுப்பிடுவோம் பரலோகம்
நாங்கள் வாழ்ந்திடுவோம் சொர்க லோகம்

தலை குனியக் குனியத் தான் குட்டுடா,
இப்போ உனக்கும் உன்தன் பாட்டனுக்கும் சேர்த்து வைக்கிறோம் வேட்டுடா!

இங்கிருந்து மட்டும் அல்ல உலகத்தையே விட்டு ஒழிஞ்சி போ!

என்னடா கரோனா, உனக்கு என்னாச்சு?
இப்போது நீ போடும் ஆட்டம் அத்து மீறி போயாச்சு!

லாக் டவுன் முடிந்த பின்னும், மக்களே பாதுகாப்பாய் இருங்க!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jun-21, 3:12 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

மேலே