காட்டுப்பன்றி இறைச்சி - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஏறிய வாதம் போகும் எழும்பிடுங் காச நோய்கள்
வீறிடும் விழிநோய் சீதம் விஷக்கடி கிரந்தி யுண்டாங்
கூறிடு மூலங் கீலங் குதங்குடல் வாதம் நாசம்
மாறிடு காட்டுப் பன்றி மாங்கிசந் தனையுண் பார்க்கே

- பதார்த்த குண சிந்தாமணி

இதனையுண்டால் வாயு, மூலம், தோல்கீலம், குடல் விருத்தி இவை நீங்கும்; இருமல், கண்ணோய், கபம் விடக்கடி, இரணம் இவை உண்டாகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-21, 7:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே