ஊர்ப்பன்றி இறைச்சி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
வாதபித் தங்கள் சேரும்
..மருவிய புண்ணும் உண்டாந்
தாதுவுங் கபமும் பொங்குந்
..தாங்கொணா அசதி யாகும்
வாதுற அனந்த நோய்கள்
..வளர்ந்தெழுந் துன்பம் எய்தும்
ஓதியுண் மருந்து நாசம்
..ஊர்ப்பன்றிக் கறியுண் பார்க்கே
- பதார்த்த குண சிந்தாமணி
வாதம், பித்தம், இரணம், கபம், இளைப்பு, சுக்கிலம், சிலேட்டுமம், மருந்து கேடு முதலான பல நோய்களை உண்டாக்கும்

