நாட்படு நட்பு
முகம் அறிவேன்
முகவரி அறியேன்
விலாசம் அறியா
வீட்டிற்கு நானும்
களிப்புடன் வரைந்த
கடிதம் இதுவே...
நண்பியாய் நானும்
நிலைத்திட வேண்டும்
தோள்சாய உந்தன்
தோழமை வேண்டும்
மூப்பிலும் கூட
முதன்மையாய் நானும்
உந்தன் வாழ்வில்
உளவிட வேண்டும்
காலன் வந்திடும்
காலமும் கூட
உந்தன் நட்பெனும்
உரிமை வேண்டும்
உயிருள்ள வரையிலும்
உடன் வருவாயா?
இசைந்திட உனக்கு
இன்னலேதும் உண்டா?
-உமா சுரேஷ்