வேண்டும் ஒரு குட்டித்தோழி

வேண்டும் ஒரு தோழி

நான் கோலூன்றும் காலம்
உடன் குறுநடை பயில
வேண்டும் ஒரு குட்டித்தோழி

உடல் நடுங்கும் நேரம்
கரம் பற்றி நடக்க
வேண்டும் ஒரு குட்டித்தோழி

தோல் சுருங்கும் போது
தோள் சாய்த்துக்கொள்ள
வேண்டும் ஒரு குட்டித்தோழி

பார்வை மங்கும் வேளை
கண்ணுக்குக் கண்ணாய் வாழ
வேண்டும் ஒரு குட்டித்தோழி

யாருமற்ற நேரம் என்
தனிமைத் துயரைத் துடைக்க
வேண்டும் ஒரு குட்டித்தோழி

சொல்லும் கதைகள் கேட்டு
கை தட்டி சிரிக்க
வேண்டும் ஒரு குட்டித்தோழி

முதுமைப் பிணியை போக்கி
இளமையாய் மனதை மாற்ற
வேண்டும் ஒரு குட்டித்தோழி ...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (19-Jun-21, 11:43 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 145

மேலே