தேனிதழில் மதுக்கிண்ணம் தனையேந்திச் சிரிக்கின்றாள்

வானிடையே வருகைதரும் வெண்ணிறப்பே ரெழில்நிலவே
தேனிதழில் மதுக்கிண்ணம் தனையேந்திச் சிரிக்கின்றாள்
இவளின்பூ இதழ்சிரிப்பின் முன்நீஒன் றுமேயில்லை
மலரவளி தோமாலை வருவாள்சொல் பின்நீயே !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யாப்பார்வலர்களுக்கு மட்டும் விளக்கம் :---
----நாலு சீர் அளவடிகள் நான்குடன் கலித்தளை மிகுந்து
வந்த இந்தப்பா தரவு கொச்சக் கலிப்பா

வா/ னிடை/ யே ---- நேர் நிரை நேர் ----கூவிளங்காய் முன் வரு நிரையசை
காய்முன் நிரை --கலித்தளை

அதுபோல் --தேனிதழில் மது----நேர் நிரை நேர் --கூவிளங்காய் முன் மது --நிரை
மேலும் பல உள .
தவிர்க்கப்பட வேண்டியது மாசீர் விளங்கனிசீர் ---தேமா புளிமா கூவிளங்கனி கருவிளங்கனி

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-21, 6:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே