காத்திருந்தேன்

இதோ மாலை சூரியன்
மறைந்து கொண்டான்!

இரவு மகள் மெல்ல மெல்ல தன் துப்பட்டாவை விரிக்கிறாள்!

மரங்கள் உன் வரவை எண்ணி தலையசைத்து தாலாட்டு பாடுகிறது!

தென்றல் முல்லைகொடியோடு இணைந்து நளினமாய் நடனமாடுகிறது!

மாலையுடன் இரவு கலக்கும்
இந்த பொன் வேளையில்

நிலா பெண்ணே!
உன் வரவை எதிர் பார்த்து பேருந்து நிறுத்தத்தில் ஒரு குடையாய் காத்திருந்தேன்!

எழுதியவர் : சுதாவி (19-Jun-21, 7:24 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kathirunthen
பார்வை : 154

மேலே