சிந்துபாடுது என்னிதயம் சேரத்தந்தமே

சிந்துபாடு தடிஎன்னி தயம்சேரத் தெழில்பெண்ணே
சிந்துநதிச் சமவெளியா னதடிசெந் தமிழ்நெஞ்சம்
சிந்துநதி எதற்குன்ஆ லப்புழை அலைமீதில்
நிலவொளிவீ சிடமலையா ளத்திலே பாடுபோதும் !

----தரவு கொச்சக் கலிப்பா வாய் வடிவமைக்கப்பட்ட பா
கீழே வேறு வடிவிலும்

சிந்துபாடு தடிஎன்னி தயம்சேரத் தெழில்பெண்ணே
சிந்துநதிச் சமவெளியா னதடிசெந் தமிழ்நெஞ்சம்
சிந்துநதி எதற்குன்ஆ லப்புழை அலைமீதில்
அந்திநில வில்மலையா ளத்திலே பாடுபோதும்

----கலி விருத்தம்

சிந்துபாடு தென்னித யம்சேரத் தந்தமே
சிந்துச் சமவெளியா யாய்என் தமிழ்நெஞ்சம்
சிந்துநதி ஏனுன்ஆ லப்புழைஅ லையில்
மலையாளப் பாடலேபோ தும் !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-21, 7:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே