நண்பன் நட்பு

தன்னையே தன் உயிரையே நண்பனுக்காக
தந்திடுவான் காணிக்கையாய் நண்பன் அவன்
எப்படி துரியோதனனுக்கு வாய்த்த கர்ணன்போல
தூய நட்பின் உச்சம் தியாகம்

தீயோர் நட்பு தீமையில் முடியும்
சீசர் புரூட்டஸ் நட்பைப்போல்

அதனால்தான் வள்ளுவரும் நண்பன் யார்
என அறிந்த பின்னே பழகுதல்
நன்று என்றுரைத் தார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Jun-21, 8:31 pm)
Tanglish : nanban natpu
பார்வை : 264

மேலே