மாய நீர்ப் போன்றதே
என்னவென்று நினைத்தார்களோ மக்களை
தேர்தலின் போது தாறுமாறாய் வாக்குறுதிகள்
முடியாததை உடனே முடிப்பதாகவும்
அறிவில் ஆற்றலில் தாங்களே சிறந்தோரென்றும்
ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய ஆளுங்கட்சியின்
தவறுகள் அனைத்தும் களையப்பட
போர்க்கால நடவடிக்கைகளை எடுப்போம்
என்றவர்கள் இன்று பம்மாத்து பேசுகின்றனர்
ஐந்தாண்டு ஆட்சிக்காலம் உள்ள நிலையில்
இன்றே வாக்குறுதி நிறைவேற்றல் என்பது
மாய நீர்ப் போன்றதே என்று மாற்றி பேசும்
மதிநிறைந்த மந்திரிகளாய் மாறிவிட்டனர்
குதிரைக்கு கொம்பு முளைத்தால்
கொம்பைக் கொண்டு கிணறு தோண்டுவதாய்
கூறும் நிலைக்கு அரசியல்வாதிகள் வளருவர்
அதையும் நம்பி மக்கள் வாக்களிப்பர்
மதியில்லாதோரால் தேர்ந்தெடுக்கப் படுவோர்
மகத்துவம் வாய்ந்தவர்களாகவா இருப்பர்?
------ நன்னாடன்.