மனித கடவுள்

கருவை சுமப்பவள் தாய் ,
கருவை தந்தவர் தந்தை ...

அன்பை அரவணைப்பாய் தருபவள் அன்னை ,
அன்போடு அன்பவத்தையும் தருபவர் தகப்பன்...

கவனிப்பை கருணையாய் தருபவள் அம்மா ,
கரிசனையும் கண்டிப்புடன் தருபவர் அப்பா ...

தோழியாய் ஆறுதல் சொல்பவள் அம்மா ,
தோழனாய் தோல்வியை எதிர்கொள்ள பழக்குபவர் அப்பா...

கண்ணீரை துடைக்கும் கரிசனம் அம்மா ,
கண்ணீரை காட்டாத கடினம் அப்பா ...

குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் தாய்
எல்லோரும் தகப்பனே ...

தன்னை தொலைத்து தன் மக்கள்
நலம் காக்கும் எல்லா தகப்பனும்
தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கவில்லை
என்றாலும் தாய் தான்...

தாயை தன்னுள் கொண்டு
தனக்கென ஏதுமின்றி
தன் மக்கள் நலம் காத்து
மகிழ்ச்சி கொள்பவன்...

தன் தோளில் சுமந்து
தான் கண்டிராத பலவும்
தன் பிள்ளைகள் பார்க்க செய்யும்
தியாக தோழன்...

தன் வலி சொல்லாது
தன் மக்கள் வாழ்வதனை
உயர்த்திடும் உன்னதன்...

உயிர் தந்து, உயிராய் காத்து
உயிரில் கலந்து, உயிராய் மாறி
போகும் கண் பார்க்கும் மனித கடவுள்...

ஆம்... படைப்பவன் இறைவன்
என்றால் படைப்பை பதிப்பித்தவனும்
இறைவன் அன்றோ!!!...

இவன்
மகேஸ்வரன்.கோ (மகோ )
91-98438 12650
கோவை -35

எழுதியவர் : மகேஸ்வரன்.கோ (மகோ ) (20-Jun-21, 8:00 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
பார்வை : 68

மேலே