முதிர் கன்னி

முதிர் கன்னி
முதிர்ந்த தேகம் இது
முதிராத உள்ளம் இது

எனக்கும் மனம் உண்டு
மனம் நிறைய வலிகளுண்டு

வலிகள் தீர வழியுமில்லை
வந்த வலி மறையவில்லை

வயது ஏற ஏற
ஏக்கம் சற்றும் குறையவில்லை
ரணம் ஒன்றும் தீரவில்லை

தனிமைச் சிறையில் நான்
தன்னந் தனியே தவிக்கிறேனே

தாலி கழுத்தில் ஏற ஏற
தவமும் தான் கிடக்கிறேனே

கணவரோடு கை கோர்த்து
கலகலன்னு சிரித்திடவும்,
குடும்பம் பிள்ளை குட்டியோடு
வாழ்ந்திடவும் ஆசை உண்டு

நகைத்தோர் கண் முன்னே
ஒய்யார நடை பயில்வேன்...
ஒரு கை கணவரோடு...
மறு கையில் பிள்ளையோடு...

காலம் வரும் காத்திருப்பேன்
கனவை எதிர் பார்த்திருப்பேன்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (20-Jun-21, 2:19 pm)
Tanglish : mudhir kanni
பார்வை : 28

மேலே