சிரிப்பு

சிலருக்கு பலம் ...
சிலருக்கு பலவீனம் ...
ஆனால் பலருக்கு அது பரிசு ....

மனதுக்கு பிடித்தவருக்கும்
மனதுக்கு பிடிக்காதவருக்கும் மருந்து....
மனம் மயக்கும் மாய மருந்து......

இடி அமீன் போன்றவனையும் இளக செய்யும் ,
காயம் பட்ட இதயத்திற்கு இதம் கொள்ள செய்யும்,
இன்பம் கொள்ள செய்யும் ,
இணையில்லா இயற்கை மருந்து ...

கொடுப்பவன் , வாங்குபவன் இருவருக்கும் ,
இன்பத்தை தரும் ஒரே உன்னதம் ..

எதிரியையும் தன் பால் ஈர்க்கும் தனித்துவம் ,
தந்தாலும், பெற்றாலும் தன் மனம் மகிழும் ,
மந்திர ஜாலம் ...

இளமை மாறாதிருக்க ,
இறுக்கமான மனம் இளக ,
எதிலும் ஏமாற்றம் கொள்ளாதிருக்க ,
ஏற்றம் பல காண ,
எல்லோருக்கும் நெருக்கமாய் இருக்க ,
எவருடனும் பகை இல்லாதிருக்க ,
எப்பொழுதும் இன்பமாய் இருக்க ,
எதிரிகள் என்று எவரும் இல்லாதிருக்க ,
எப்போதும் தன் பால் கொண்டு இருக்க
வேண்டிய அற்புத ஆயுதம் ,
சிரிப்பு .....

ஆளை அல்ல ஆண்டவனையும்
மயக்கும் மந்திரமாம் ,
இந்த அற்புத சிரிப்பு ...

இவன்
மகேஸ்வரன். கோ(மகோ)
கோவை-35
+91 -98438 12650

எழுதியவர் : மகேஸ்வரன். கோ(மகோ) (21-Jun-21, 9:50 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : sirippu
பார்வை : 50

மேலே