முறிந்த காதல்
அவன் காமமுட்கள் என்னுடம்பைத் தீண்டி
துன்புறுத்தும் ஒவ்வோர் வினாடியும் எனது
சிந்தனை தீர்கமானது அவன் விரும்புவது
என்னுடலை மட்டுமே உள்ளதை அல்ல
காதல் என்பது அவன் அறிந்த அகராதியில்
இதுவே என்பதும் விளங்க அதனால் அவனை
விட்டு விலகிவிட்டேன் நான் தாமரை
இலையில் தண்ணீராய்