ஆவலுடன் காத்திருக்கிறேன்

என் இதயத்தை
கொள்ளைகொண்டவளே
உன்னை தொடர்ந்து
நித்தம் நித்தம்
நான் வருகிறேன் ..!!

நீ சம்மதம் என்று சொன்னால்
உனக்காக காலமெல்லாம்
காத்திருப்பேன் ..!!

ஆனால்.. நீ என்னை
திரும்பி பார்ப்பதில்லை
இது என்ன கண்ணாமூச்சி
விளையாட்டு ..!!

உன் மனதில் இருப்பதை
சொல்லிவிடு
"NO " என்பதை விரைந்து
சொல்லி விடாதே

தாமதமானாலும்
பரவாயில்லை
"YES " என்பதையே
உன் பதிலாக எதிர்பார்த்து
ஆவலுடன்
காத்திருக்கிறேன் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jun-21, 11:28 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 127

மேலே