காதல் தருணம்
நிகழும் நன்நாளில்
வாழ்வின் வரமென்றாகிறாய்...
தித்திக்கும் திருநாளில்
தீபத்தின் ஒளியென்றாகிறாய்...
என் முதல்முடிவு
நீயென்றாகிறாய்...
என் முகவரி மாற்றி
நீ போகிறாய்...
விடியல் வந்தால்
கூந்தலிலே இரவை தந்தாளே
மடியில் சாய்ந்தாள்
கண்கள் மூடி உறங்கி போனாளே
உன் விழாகோல விழிகள்
உருட்டி என்னை பார்க்க செய்...
பூ மாலையாய் நீ
என்னை கோர்த்து வை...
உன் அகத்தின் அழகை
முகத்திரையில் தெரிய வை...
உன் இதழின் குறுநகையை
கன்னக்குழியில் பதிய வை...