காவிரி நதிக்கரை மணல்வெளியில்
வெள்ளிநதிய லைகள்துள் ளிப்பாய்ந்திடும்
காவிரிநதிக் கரைமணல்வெளி யில்காற்றுடன்
காதல்கதை பேசிடும்கரை யோரப்பூக்கள்
மெல்லிதழ்களில் புன்னகை வெண்முத்துருள
பூப்பறித்திடும் பொழுதினிலவ னைஎங்கே
எனப்பூக்கள்
கேட்டபோது என்ன சொன்னாய் தாமதம்
அவனுக்கு வாடிக்கை என்று தானே !