பேராசிரியர்

பேராசிரியர்...
மேரி சுகந்த ரத்தினம்...
இவர் வேலைக்குச் செல்வது
நிறைய மாணவர்கள்
வேலைக்குச் செல்வதற்கு...

மாணவ மேரியாய்
இவர் கற்றுக் கொண்ட கல்வி
பேராசிரியர் மேரியிடம்
பரிணாமம் பெற்று
எட்டுத் திக்கும் பரவுவதால்
உலகு இவராலும் வளர்கிறது...

இளமையைத் தோற்றத்தில்
முதிர்ச்சியை பழகுவதில்
உதவுவதை ஆபரணமாய்த்
தன்னகத்தே வைத்துக் கொள்ளும்
வித்தை தெரிந்து கொண்டவர்
மேரி சுகந்த ரத்தினம்...

பதினேழு வயது முதல்
அறுபது வயது வரை
கல்லூரி சென்று வரும்
யோகம் இவருக்கு...

புத்தகங்களின் அர்த்தங்களை
கரும்பலகைக்கு மாற்றும்
வித்தகம் தெரிந்த...
மேரி சுகந்த ரத்தினத்திடம்
பாடம் பயிலும் யோகம்
இவரது மாணவர்களுக்கு...

இயல்பானவர்... இனிமையானவர்...
பண்பானவர்.. பேராசிரியர்...
மேரி சுகந்த ரத்தினத்திற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வசந்தங்களின் வரங்களில்
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...
👍🍫💐😃🌺🌸

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Jun-21, 4:34 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : perasiriyar
பார்வை : 86

மேலே