மிருணாளினி
பேத்தியின் மழலை...
காதினில் இன்பத்தேன்
வந்து பாய்கிறது...
வசந்தங்களை அள்ளி
அள்ளித் தருகிறது...
யாழையும் குழலையும்
தள்ளித் தள்ளி வைக்கிறது...
ஒரு தாத்தாவிற்கு
வேறென்ன வேண்டும்...
சோர்ந்திருக்கும் போதெல்லாம்
தேர்ந்தெடுக்கும் ஒலி
மிருணாளினியின் மொழி...
🌹😃👍