மிருணாளினிக்கு

11-April-2021

மிருணாளினி... நீ
எந்தன் மனதிற்குள்
வரும் போதெல்லாம்
நெஞ்சம் இனிக்கிறது...
தேனையும் பலாவையும்
ஜெயிக்கிறது...

தென்றல் வீசும்
நந்தவனத்திற்கு இன்று
பிறந்த நாள்...
தேவதையே... எங்கள்
வாழ்வில் நீ வந்தாய்...
ஆனந்தம் தந்தாய்...
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்...

யாரையும் ஜெயிக்க
வேண்டும் என்பதில்லை...
உன்னை நீயே
ஜெயித்துக் கொண்டிரு...

வரலாற்றில் இடம் பிடிக்க
வாழ வேண்டும் என்பதில்லை..
உன்னை உனக்குப் பிடிக்க
வாழ்ந்து விடு...

வசந்தங்களின் தாலாட்டில்
வளங்களின் வரங்களில்
வானமும் வசப்பட
கல்வியோடு செல்வமும்
வீரமும் கொண்டு
வாழ்க பல்லாண்டு காலம்...
எல்லாம் உனக்கு வசந்த காலம்...

மிருணாளினிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
🌹💐👏👍😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Jun-21, 5:04 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 106

மேலே