நான் தேடி அலையும் என்னவள்

கண்டுகொண்டேன் அவளை என்னவளை அவள்
வண்ண மேனியின் அழகைக் கண்டுகொண்டேன்
கண்டு மயங்கியநான் அவளோடு பேசிப்பார்த்தேன்
பண்பின் சிகரம் அவள் என்றும் அறிந்துகொண்டேன்
அவள் சிந்திய வார்த்தைகளில் அன்பின் சிகரமோ
இவளோ என்றும் வியந்தேன் நான்
இப்படி எல்லாம் நிறைந்த என்னவள்
இவளோடு உடலோடு இணைந்து உறவாடி
உள்ளதால் இணைந்து இவளைத் துணையாய்
ஏற்று இனிதாய் இணையும் நாள்
தேடி நாடி அலையும் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jun-21, 12:20 pm)
பார்வை : 215

மேலே