சித்தரிப்புகளை மாற்றியமைத்த பெண்
தேவிக்கு அப்பா இல்லை. அண்ணனின் பாதுகாப்பில் படித்து வந்தாள். அண்ணன், தன் அப்பா இறந்தவுடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு தன் தங்கையை படிக்கவைத்தார். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த தேவி. அடுத்த ஆண்டு கல்லூரி சேர்வதற்கு தயாராகினாள். தேவி பள்ளி படிப்பு முடித்தவுடன், தன் அத்தை பெண் கேட்டு வந்தார். அண்ணனும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனார். தேவியை கல்லூரி படிக்கவைக்க வசதி குறைவாக இருந்தது. மேலும், தன் தங்கை அதிகம் படித்தால் தன் அத்தை மகனை திருமணம் செய்துகொள்ள மாட்டாள் என்று கருதி, தன் அத்தை பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தார். ஆனால், தேவி திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பம் இல்லை. நான் படிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தாள். திருமணம் செய்ய மறுத்து விட்டாள்.
தேவி ஒரு ஆடிட்டர் அலுவலகத்தில் சேர்ந்து வேலை பார்த்தாள். தனக்கு கிடைத்த ஊதியத்தில் பாதியளவு வீட்டிற்கு கொடுத்துவிட்டு, மீதம் பணத்தை சேர்த்து வைத்து, தன் அண்ணனுக்கு தெரியாமல் படிக்க ஆரம்பித்தாள். பெரியார் யூனிவெர் சிட்டியில் பி.காம் படித்தாள். டைப் ரைட்டிங், ஷார்ட் ஹண்ட் , கம்ப்யூட்டர், என்று அவள் விருப்பப்படி படித்து முடித்தாள். நான்கு ஆண்டு காலம் ஓடியது. நான்கு ஆண்டு காலமும் வருடத்திற்கு இரண்டு முறை பெண் கேட்டு வருவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தன் விருப்பப்படி படித்து வந்தாள். படிப்பது வீட்டிற்கு தெரிந்தால் வேலைக்கு செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்று தேவி படித்து முடித்த சான்றிதழ் அனைத்தையும் தன் தோழியிடம் கொடுத்து வைத்தாள். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தன் அண்ணன் விருப்பம்படி திருமணம் செய்து கொண்டாள். தேவியின் வாழ்க்கை நன்றாக ஓடியது. இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். குழந்தைகளை பள்ளி சேர்க்கும் வயது வந்தது. ஒருவர் வருமானம் போதுமானதாக இல்லை. தேவி ஒரு கம்பெனியில் கம்ப்யூட்டர் வேளைக்கு சென்றாள். ஐந்து ஆண்டு காலம் ஓடியது. திடீர் என்று, தேவி வேலை செய்யும் கம்பெனியில் ஆடிட்டிங் ஒர்க் பார்ப்பவருக்கு, உடல்நிலை சரியில்லை. அவரால், வேலை பார்க்க முடியவில்லை. ஆதலால், வேற ஒரு ஆடிட்டிங் ஒர்க் தெரிந்தவர் வேண்டும் என்று கூறினார்கள். எனக்கு ஆடிட்டிங் ஒர்க் தெரியும் என்று தெரியப்படுத்தினாள் . அப்படியென்றால், இந்த வருட கணக்கை முடித்து கொடுக்க சொன்னார்கள் . அவளும் , நல்லபடியாக கணக்கை முடித்து கொடுத்தாள். வாழ்த்துக்கள் கூறினார்கள். ஓராண்டு கழித்து ப்ரோமோஷன் கிடைத்தது. தேவி தன் ப்ரோமோஷன் பற்றி அம்மா, அண்ணன் , அண்ணி, தோழி, அனைவரிடமும் பகிர்ந்து கொண்டாள். எல்லாரும் வாழ்த்துக்கள் கூறினார்கள். பாராட்டினார்கள். தேவியின் அண்ணாவிற்கு, தேவி வீட்டிற்கு தெரியாமல் படித்த விசயம் தேவியின் ப்ரோமோஷனை பற்றி கூறுகையில் தான் தெரியும். மிகுந்த பெருமிதம் கொண்டார். தேவியின் அண்ணன் தன் தங்கையை பற்றி அவ்வப்போது மற்றவரிடம் பெருமையாக பேசுவார். அவருக்கு அதிக பெருமை தன் தங்கையை நினைத்து.
தேவியின் ஊதியம் அதிகரித்தது. அதோடு வேலை பளுவும் அதிகரித்தது. அதிக நேரம் எடுத்து வேலைபார்க்கும் நிலை ஏற்பட்டது. தன் குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க ஆசைப்பட்டாள். தன் படிப்பு பாதியில் நின்றமாதிரி தன் பசங்க படிப்பு பாதிக்க கூடாது என்று நினைத்து, தனக்கு கிடைத்த இந்த வேலையை நன்றாக செய்து வந்தாள். தேவி வேலையின் காரணமாக வீட்டிற்கு கொஞ்சம் தாமதமாக செல்வாள். தேவியின் வேலை பளுவை பற்றி எவ்வளுவு தான் கூறினாலும், வீட்டில் இருபவர்கள் தேவி கூறுவதை புரிந்துகொள்ளாமல் சண்டை போடுவார்கள். தேவியும் எந்த பிரச்சனைகளையும் பொருட்படுத்தாமல் தன் பசங்க படிப்பையும், எதிர்காலத்தையும், மனதில் கொண்டு வேலை பார்த்து வந்தாள். இப்படியே சண்டைகளோடு சில வருடம் கழிந்தது. நாளடைவில் தேவி வீட்டில் இருப்பவர்கள், தேவி வீட்டிற்கு தாமதமாக வருவதை பற்றி, தேவி வீட்டிற்கு, உறவினர்களுக்கும் தெரியும்படி நடந்து கொண்டார்கள்.
ஒவ்வருவரும் தேவிக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்கள். தேவியும் தன் வேலையை பற்றி சிலர்க்கு விலக்கி கூறுவாள். சிலர் புரிந்து கொள்வார்கள். வேறு சிலர் வேலைக்கு போக வேண்டாம் என்று கூறுவார்கள். தேவியும், நாம் வேலையை விட்டால், பசங்க படிப்பு பாதிப்புக்குள்ளாகும், திரும்ப இந்த வேலை, இந்த ஊதியம் கிடைப்பது கடினம் என்று தொடர்ந்து வேலைக்கு சென்றாள். தன் மூத்த மகன் பள்ளி படிப்பை முடித்தார். கல்லூரி செல்ல தயாராக இருந்தார். வீட்டில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இத்தனை வருடம் தன் வீட்டில் வந்த பிரச்சனைக்கு காரணம் , உறவினர் சிலர், அண்ணனின் மனைவி அண்ணி மட்டுமே காரணமாக இருந்துருகிறார்கள். இதை தெளிவாக தெரிந்து கொண்ட தேவி
மன உளைச்சலுக்கு ஆளானாள். தேவியை பற்றி தன் அண்ணி தேவியின் தோழிகளிடம் தவறாக சித்தரித்து கூறியதை கேட்டு மனம் உடைந்து போனாள். உறவினர் சிலர் வேலையை விட்டு நிறுத்திவிடு என்று தன் வீட்டில் உள்ளவரிடம் கூறியதை கேட்டு, காயங்களுக்கு உள்ளானாள். தேவியை பற்றி சித்தரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் நாம் வேலையை விட்டுவிடலாம் என்று முடிவு எடுத்தாள். ஒரு நாள் பழைய புத்தகத்தின் மத்தியில் இருந்த விவேகானந்தர் சிந்தனை துளிகள் எடுத்து படிக்கச் ஆரம்பித்தாள். தனக்கான முடிவு கிடைத்தது. தேவி தெளிவாக சிந்திக்க ஆரம்பித்தாள். நம் மீது எந்தவித தவறும் இல்லை. நாம் நம் பசங்க வளர்ச்சிக்காக மட்டும்தான் வேலை பார்க்கிறோம். இதை தன் வீட்டில் இருப்பவரே புரிந்து கொள்ளவில்லை. மற்றவர்களை பற்றி நாம் கவலைபடுவது நம் முன்னேற்றத்தை கெடுக்கும். என்பதை, தேவி புரிந்து கொண்டு,
தன் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் சில உறவினர் மத்தியில்,
தன் பெயரை கெடுக்க நினைக்கும் சில உறவினர் மத்தியில்
ஒரு "குருடாக", ஒரு "செவுடாக ", ஒரு "ஊமையாக " காட்சியளித்தாள் தேவி.
தொடர்ந்து தன் பயணத்தை தொடர்ந்தாள். தன் பசங்களை நன்றாக படிக்கவைத்தாள். பசங்களும் வாழ்க்கையில் முன்னேறினார்கள் தேவிக்கும் அடுத்த ப்ரோமோஷன் கிடைத்தது.
தேவியை பற்றி சித்தரித்தவர்கள் குழந்தைகளின் நிலை, கேள்வி குறியாக???
இருக்கிறது.
தேவியின் குழந்தைகளின் நிலை, ஆச்சிரிய குறியாக !!!
இருக்கிறது.
தேவியின் நற்சிந்தனை மட்டுமே தேவியின் முன்னேற்றத்துக்கு காரணம். .
நல்ல நூல்களை படிப்போம்.
நற்சிந்தனைகளை வளர்ப்போம்.
வாழ்வில் முன்னேற்றம் அடைவோம்.
வாழ்க வளமுடன் .