திருட்டு
சொல்லாமல் எடுத்தால் திருட்டு;
இல்லாதவன் எடுத்தால் வறுமை;
இருப்பவன் எடுத்தால் பகட்டு
பொல்லாதவன் எடுத்தால் வரட்டு;
போக்கத்தவன் எடுத்தால் பொழப்பு;
இதயத்தை திருடினால் காதல்;
அன்பைத் திருடினால் பாசம்;
ஆசையைத் திருடினால். நாசம்;
இருப்பதை எடுத்தால் களவு;
சுருட்டி சென்றால் சுரண்டல்;
கூட்டமாய் திருடினால் சூறை;
ஆதாயம் தேடி வாங்குவான் லஞ்சம்;
அரசியல் வாதி செய்வான் ஊழல்;
பணக்காரன் சுரண்டியே திருடுவான்;
பாசக்காரன் கொட்டியே திருடுவதான்;
படித்தவன் பாசாங்கு செய்தே திருடுவான்,
பாமரமன் பகையறியாது மனத்தை திருடுவான்;
பொருளைத் திருடியவன் கள்வன்;
அருளைத் திருடியவன் பக்திமான்;
கருணையைத் திருடியவன் இரக்கவாதி;
பகற்கொல்லை அடிப்பவன் வியாபாரி;
பார்த்தே கொள்ளையடிப்பவன் அரசியல்வாதி;
பதுங்கி கொள்ளையடிப்பவன் திருடன்;
பயபக்தியாய் திருடுவான் பத்திமான்;
பாசத்தை திருடுபவள் தாய்;
பாவத்தை செய்தே திருடுபவன் புத்திரன்.