அழகான இணையை
தவறு என்று தெரிந்த போது - அதை
தவறியும் செய்திடாதீர்கள்
ஒரு விந்தணுவாலே திறன்மிகு
குழந்தை பிறக்கிறது - இன்பமே தவறு
அழகைக் கண்டு அடைய முனையாதீர் - அதில்
ஆயுள் முழுவதற்குமான இம்சை உள்ளது
அழகான இணையை கொண்டோர்களுள்
அடிக்கடி மன பிறழ்வு தோன்றுவது இயல்பே
உயர்வான பொருளால் ஆபத்து நம்மை
அழகான நிழல் போல் தொடரும்
தங்கத்தால் நகை புனைந்தோர்
அங்கம் சிதைக்கப்பட்டு இறப்பதைப் போல்
கோபத்தை மிகுதியாய் கொள்ளாதீர்கள் - அது
நம்மை கொடூரனாய் மாற்றிவிடும்
எறும்பால் கடிபட்டு ஆயுள் நிறைவுற்று
மாண்டவர் பற்றிய உண்மையை அறியுங்கள்
உடலுக்கு ஒவ்வாத எதையும் உண்ணாதீர்
உபத்திரத்தால் உடல் மிகவும் அல்லலுறும்
புகைப்பிடிப்போர் நுரையீரல் நோய்த்தொற்றி
குறை வாழ்வோடு இறப்பதைப் போல்
------ நன்னாடன்

