மாமனிதன்

காதலித்தேன் ...
தோல்வி கண்டேன்...
வேறொருத்தியுடன்
மணமானது ....
மனம் ஆறியது.

செய்த தொழில்
தோல்வியாச்சு ...
எடுத்த புதுத் தொழில்
வெற்றியாச்சு ...
மனம் மாறியது.

பிறந்தெடுக்க
மகவு இல்லை...
தத்தெடுத்தேன் ...
மகிழ்ச்சியே எல்லை ...

நோய் வந்து
முடங்கி விட்டேன்...
இவ்வூர் பிடிக்கவில்லை...
நாளை
மண்ணூர் செல்கிறேன்...
கலங்கவில்லை.

வாழ்க்கையில்
எதுவும் வரலாம்...
தோல்வியைக் கண்டு
துவண்டிடாது ...
புதியத் தேடலைத்
தேடுபவனே ...
மனிதன் ...
மாமனிதன்.

எழுதியவர் : PASALI (30-Jun-21, 5:50 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 66

மேலே