கசக்கும் இனிப்பு

கசக்கும் இனிப்பு

வலி நிறைந்த வாழ்வில்
இனிப்பு கூட கசப்பாய்...

பெண்ணென பிறந்ததில்
என் தவறேதும் இல்லையே...

வார்த்தை ஊசியால்
குத்தியது போதும்...

நானும் வாழ்வின் ருசியை
சற்று ருசித்து விட்டுப் போகிறேனே...

நானும் ஓர்
அற்ப மானிடன் தானே...

இனிப்பு வார்த்தைகள் வேண்டாம்
இதம் தரும் சொற்களும்
வேண்டாம்
இதயத்தை ரணமாக்கும் சொற்கள் மட்டும் வேண்டாமே...

கிள்ளுக் கீரையாய்
கிள்ளி எரிந்தது போதும்
எட்டி நின்று
எள்ளி நகைத்தது போதும்...

சுயத்தை இழந்து
காணும் சுகம் ரணமே...

பிறப்பெடுக்கும் கருவெல்லாம்
சுதந்திர சுவாசம் பெறட்டும்...

சிறையில் தான் அடைக்கப்பட வேண்டுமெனில்,
பாசவலையில் பலிகாகடாவாக்கப்பட்ட
கடைசிக் கரு
நானாக இருக்கட்டும்...

மதிப்பறியா மாந்தர்
கை சேரும் வைரம் கூட
கூலாங்கல் தானே...

சுதந்திரம் காணா மனம்
விம்மி அழுதிடும் தினம்...

-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (30-Jun-21, 3:55 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : kasakkum inippu
பார்வை : 218

மேலே