இன்று பாடுபொருள் மாடு 1

வள்ளுவன் :
மாடு என்றால் நாமறிவோம்
மாடு என்ற சொல்லை வேறு பொருளில் பயன்படுத்துவார் வள்ளுவர்
தம் குறட்பாவில்

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

மாடல்ல ---மாடு அல்ல = செல்வம் அல்ல . செல்வம் என்ற பொருளில் .
இரு பொருளிலும் வேறு சில பார்ப்போம்

மாடெனக் கல்வியை கொள்ளாதான் உண்டு
கழிக்கும் வெறும்விருதா மாடு !
---வேலைக்கும் உதவாது வேறு எதற்கும் பயன்படாது தீனியை மட்டும்
தின்று கிடக்கும் மாட்டினை விருதா மாடு என்று சொல்வார்கள்
தந்தை :
காடுவெட்டி நல்வயலில் நெற்பயி ரைவளர்ப்பான்
கொட்டில் குதிரினில் மாடு

கொட்டில் --மாடு கட்டும் இடம்

குதிர் ---நெல்லை குவித்து வைக்கும் இடம்
மாடு ---இங்கே நெல்மணிச் செல்வம் என்ற பொருளிலும் .

மகன் :
பாடுபடும் பாட்டாளி யின்மகன்வே லையின்றி
சுற்றும் வெறும்விருதா மாடு

செல்போன் சினிமா மொபைக்கென சுற்றுவான்
அப்பனின் மாடிற்குக் கேடு

அப்பனின் மாடிற்குக் கேடு----அப்பன் உழைத்து சேமித்த செல்வதை (மாடு )
ஊதாரியாய் செலவித்து வீட்டின் பொருளாதாரத்திற்கு கேடு செய்கிறான்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jul-21, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே