சுக்கு - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(தேமா கருவிளம் தேமா புளிமா /
கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா)
வாதப் பிணிவயி றூதற் செவிவாய்
..வலிதலை வலிகுலை வலியிரு விழிநீர்
சீதத் தொடுவரு பேதிப் பலரோ
..சிகமலி முகமக முகஇடி கபமார்
சீதச் சுரம்விரி பேதச் சுரநோய்
..தெறிபடும் எனமொழி குவர்புவி தனிலே
ஈதுக் குதவுமி தீதுக் குதவா
..தெனும்விதி யிலைநவ சுறுகுண முனவே
- பதார்த்த குண சிந்தாமணி
சுக்கு வாத நோய், வயிற்றுப்பிசம், செவிக்குத்தல், வாய்வலி, முகநோய், தலை நோய், குலை நோய், சீதபேதி, உணவில் வெறுப்பு, முகப் பாண்டு, வயிற்றுக்குத்தல் ஆகியவற்றை நீக்கும்