சுக்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சூலைமந்தம் நெஞ்செரிப்பு தோஷமேப் பம்மழலை
மூலம் இரைப்பிருமல் மூக்குநீர் - வாலகப
தோஷமதி சாரந் தொடர்வாத குன்மநீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு

- பதார்த்த குண சிந்தாமணி

சுக்கு விலாக்குத்தல், அசீரணம், மார்பெரிச்சல், புளித்தேப்பம், வெப்பம், ஆசனநோய், சுவாசம், காசம், நீர்ப்பீநசம், நீரேற்றம், மேகவாத குன்மம், சலதோடம், சீதகிரகணி ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jul-21, 12:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே