இருளும் ஒளியும்
இருளை நீக்கி
ஒளி வீசுவதற்கு
தேடி பயன்படுத்தும்
விளக்கினை போல்தான் ..!!
சில மனிதர்களின்
தியாகத்தில் தான்
பல மனிதர்களின்
வாழ்க்கையில்
ஒளி வீசுகிறது ...!!
தேவை முடிந்தவுடன்
மீண்டும் இருளில்
வைக்கப்படும்
விளக்கை போல்தான் ...!!
தியாகம் செய்த
மனிதர்களின்
வாழ்க்கையும்
இருளில் இருக்கிறது ...!!
--கோவை சுபா