அருவிக் குற்றால அட்டகாசச் சிரிப்பே

வருகை தரும்வசந்தத் தென்றலே
அருவிக்குற் றாலஅட்ட காசச்சிரிப்பே
இருளை ஒளியாக்கும் பௌர்ணமியே
திருவருள் புரியாயோ புன்னகையால் !

-------------------------------------------------------------------------------------------------
யாப்பு வழி பார்க்கின் :

ஈரசை மூவசை நாலசை சீரினால் ஆன ஒரே எதுகை
நாலடி வஞ்சி விருத்தம்

றா/ல/அட்/ட கா/சச்/சிரிப்/பே ---தேமாந் தண்பூ கூவிளந் தண்பூ
இலக்கணப்பூவும் அழகு செய்யும் வஞ்சியின் விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-21, 10:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே