ஆடுகிறான் தற்குறியாய்

ஆயினும் கேளீர் ஒன்றிலிருந்தே தொடங்கும் எதுவும்
ஒன்றாய் பிறந்த எல்லா உயிரும் ஒன்றே ஈனும்
அரிதாய் சிலவகை ஐந்தாய்க்கூட ஈனும் கேளீர்
ஈன்ற உடனே பிறந்த இனங்கள் எழுந்து நிற்கும்
தாய் உண்ணும் உணவை உண்ணும் ஓடும் ஆடும்
சில இனங்கள் விழிக்க ஆகும் காலம் இருவாரமாகும்
மனிதனைத் தவிர இயற்கைக்கு எதிராய் எவையும்
ஈனுவதும் இல்லை வீசிவிட்டு ஓடுவதும் இல்லை
மரமும் செடியும் கொடியும் இவை போல் பலவும்
குவியலாய் பூக்கும் கொத்தாய் காய்க்கும்
இருக்கும் வரையில் கொடுத்தேபழகும்
எதையும் எதிர்பார்த்தோ நினைத்தோ வாடாது கேளீர்
பருவந்தோரும் பல வகை பலனை தந்தே வாழும்
மனிதன் மட்டுமே மண்ணை நீரை மலையை கலையை
விற்கத் துணிந்து வெட்கம் இன்றி தலைவனாய்
இன்று தாண்டவம் ஆடுகிறான் தற்குறியாய்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Jul-21, 7:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே