தொன்மையான விளையாட்டு

வலைதள விளையாட்டில் வீணாக பொழுதை கழிக்கும் குழந்தைகளே
உன் தோட்டத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிய நினைவுகள் உண்டோ
கேட்டுப்பார் உன் தாயிடம்
நண்பர்களுடன் தெரு ஓரங்களில் விளையாடும் கிட்டிப்புள் தெரியுமா உனக்கு
கேட்டுப்பார் உன் தந்தையிடம்
உன் கண்ணைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாட தெரியுமா உனக்கு
கேட்டுப்பார் உன் பாட்டியிடம்
பம்பரம் விட்டு விளையாடும் விளையாட்டு தெரியுமா உனக்கு
உன் தாத்தாவிடம் கேள்.
வலைதளத்தில் மயங்கி நீயே குழியில் விழுகிறாயே பல்லாங்குழி விளையாட தெரியுமா உனக்கு
குழந்தைகளே வலைதளங்களை விட்டு வெளியே வாருங்கள் உனக்காக காத்திருக்கும் விளையாட்டுகள் பல.

எழுதியவர் : மகேஸ்வரி (16-Jul-21, 6:44 am)
பார்வை : 1989

மேலே