இன்சுவை இப்ரான் வாழ்க வாழ்க கவிஞர் இரா இரவி

இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க !

கவிஞர் இரா .இரவி !

உள்ளூர் உணவகங்கள் மட்டும் அல்ல
உலக உணவகங்ககளிலும் உலா வருபவர் !

துபாயில் சிறந்த உணவு எங்கு கிட்டும்
தாராளமாகச் சென்று உண்டு உணாத்துபவர் !

அறுசுவை உணவுகளை ரசித்து ருசித்து
அகில உலகத்திற்கு அறிவிக்கும் ரசிகர் !

சைவம் அசைவம் பாகுபாடு இன்றி
சகல உணவையும் விரும்பி உண்பவர் !

கும்பகோணம் டிகிரி காப்பி தொடங்கி
குவைத் பிரபல உணவகம் வரை செல்பவர் !

மீன் பஜ்ஜி மிளகாய் பஜ்ஜி பாட்டி வரை
முச்சந்திக் கடைகளையும் விட்டு வைக்காதவர் !

சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல
சென்ற இடமெல்லாம் பிரபலமாகி விடுகின்றன !

விஜய் தொலைக்காட்சி நீயா ?நானா? வில்வந்து
வென்று பரிசு ஈட்டி புகழ் பல பெற்றவர் !

உழைத்த உழைப்பால் ஈட்டிய பணத்தால்
உலகப்புகழ் மகிழுந்து வாங்கி வலம் வருபவர் !

செல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு
சென்று உண்டு நல்சுவையை உணர்த்துபவர் !

பிறந்ததன் பயனே உண்பதற்குத்தான் என
பிறவி எடுத்தவர் போல உண்டு வருபவர் !

நம் உணவகத்திற்கு வரமாட்டாரா ? என
நானில உணவகங்கள் ஏங்கி வருகின்றன !

உலகப் புகழை உணவுக்குத் தந்தவரே
உலகில் தமிழ் போல உன் புகழும் நிலைக்கும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (16-Jul-21, 8:58 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 61

மேலே