மணமுறிவு
பல பெரியோரின் முன்னாள் மணம் ஆகியது
பெற்றோரால் அமைத்து தரப்பட்ட வாழ்க்கை
மனம் தடுமாறினாலும் பெற்றோரே சரி செய்தார்கள்
மணமுறிவு கையால் என்னும் அளவே இருந்தது
பதிப்பாளர்களைக் கொண்டு நான்கு நண்பர்களை மட்டுமே வைத்து மணமாக தொடங்கியது
பெரியோரின் ஆசீர்வாதமும் இல்லை பெற்றோர் அமைத்துத் தந்த வாழ்க்கையும் இல்லை
மனம் தடுமாறும் நிலையில் அதை சரி செய்ய பெற்றோர்களும் அருகில் இல்லை
அதன் பயனால் ஏற்பட்டது மணமுறிவு கையில் அடங்கா எண்ணிக்கையில்.
அதன் விளைவாக எத்தனை பிஞ்சு உள்ளங்கள் குழந்தைகள் காப்பகத்தில் உள்ளன
பாவம் அது என்ன தவறு செய்தது
தாயிடம் இருப்பதா தந்தையிடம் இருப்பதா என்று தடுமாறும் நிலையில் உள்ள குழந்தையின் அவலநிலை அதைவிடக் கொடியது.