காலம் காத்திருப்பதில்லை

காலத்திற்கு
நான் யார்,..? நீ யார் ...?
என்று தெரியாது ..!!

காலச்சக்கரம்
யாருக்காகவும்
காத்திருப்பதில்லை
தன் சுழற்சியையும்
நிறுத்திக் கொள்வதில்லை..!!

நாம் எல்லோரும்
காலத்தின் கட்டளைக்கு
கட்டுப்பட்டவர்கள்
காலத்திற்கு நாம் யாரும்
கட்டளையிட முடியாது ..!!

காலத்தை யாரும்
கேள்வி கேட்க முடியாது
ஆனால்
காலம்தான் எதற்கும்
பதில் சொல்லும் ..!!

காலம் யாருக்காகவும்
காத்திருக்ககாது
நாம்தான் அதன் பாதையில்
பயணம் செய்ய வேண்டும் ..!!

இறந்த காலத்தை நினைத்து
கவலைகொள்ளாதே...!!

எதிர் காலத்தை நினைத்தும்
ஏக்கம் கொள்ளாதே ..!!

நிகழ் காலத்தில்
சலனம் இல்லாமால்
வாழ்ந்துவிடு மனிதா ..!!

மீண்டும் ஒரு முறை
நினைவில் கொள் மனிதா
காலம் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-21, 12:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 1150

மேலே