பராசக்தி பாணியில் சில வரிகள்

Facebook விசித்திரமான பல post'களை சந்தித்திருக்கிறது,
புதுமையான பல Photo'களையும் Video'களையும் கண்டிருக்கிறது!
இந்த பதிவு ஒன்றும் விசித்திரமும் அல்ல,
Post செய்யும் நானும் புதுமையானவன் அல்ல!
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக காணப்படும் ஒரு சராசரியான காதலன் தான் நான்!
Facebook'ல் தினம் ஒரு post செய்கிறேன்!
அதுவும் காதலை பற்றிய post அதிகம் செய்கிறேன்!
குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்!
நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று,
இல்லை,
நிச்சியமாக இல்லை!
#சில நேரங்களில் சிரித்தேன் - ஏன்?
என்னவளின் பிரிவை கொண்டாட வேண்டும் என்பதற்காகவா?
இல்லை,
சிதறிய என் சிறு இதயத்திற்கு ஒட்டுப்போடுவதற்காக!
#என்னிடம் நானே பேசிக்கொள்கிறேன் - ஏன்?
என்னிடத்தில் அவள் பேசவில்லை என்பதற்காகவா?
இல்லை,
என்னிடத்திலே அவள் ஒருபோதும் முரண்பாடாக பேசிவிட கூடாது என்பதற்காக!
#அவ்வப்போது அழுதேன் - ஏன்?
என் அழுகை அவளுக்கு கேட்டிட வேண்டும் என்பதற்காகவா?
இல்லை,
அவள் இருக்கும் என் இதயம் இந்த வெயில் காலத்தில் வாடிவிட கூடாது என்பதற்காக!
#கண்களுக்கு வண்ணங்களை விடுத்து கருப்பு நிறத்தையே காண்பிக்குறேன்!
ஏன்?
வண்ணங்களே வேண்டாம் என்பதற்காகவா?
இல்லை,
வண்ணங்களாய் இருந்த அவளை பற்றிய என் எண்ணங்கள், வெறும் வண்ணங்கள் மட்டும் இல்லை என்பதை அவ்வப்போது எனக்கு நினைவு கூறுவதற்காக!
#மனதளவில் அவளை மறக்கிறேன் - ஏன்?
அவள் நினைவு வேண்டாம் என்பதற்காகவா? இல்லை,
மீண்டும் மீண்டும் அவளை நினைக்கும் அந்த தருணம், எனக்கு புத்துணர்ச்சி தர வேண்டும் என்பதற்காக!
#கோபத்தில் கொந்தளித்தேன் - ஏன்?
என் காதல் கைகூடவில்லை என்பதற்காகவா?
இல்லை,
மெய்யான காதலுக்கு இந்த காலத்தில் இடம் இல்லாமல் போனது என்பதற்காக!
#தனிமையை தாலாட்டினேன் - ஏன்?
தனிமையில் இனிமை காண்பதற்காகவா?
இல்லை,
என்னவள் இன்றி தவிக்கும் என் இதயத்தை
இளைப்பாரச்செய்வதற்காக!
#காதலை கடந்து செல்ல முயற்சிக்கிறேன் - ஏன்?
நானும் அவளும் பிரிந்து விட்டோம் என்பதற்காகவா?
இல்லை,
வலிகள் நிரம்பிய காதலுக்கு கண்கள் இல்லை என்பதற்காக!
#காற்றை கைது செய்து காத்திருக்கிறேன் - ஏன்?
யாரும் சுவாசிக்க கூடாது என்பதற்காகவா?
இல்லை,
அவள் சுவாசித்த காற்றைக் கொண்டு நான் உயிர் பிழைத்திட வேண்டும் என்பதற்காக!
#மௌன மொழியை பயில்கிறேன்!
ஏன்?
யாரிடமும் பேச கூடாது என்பதற்காகவா?
இல்லை,
என்றேனும் ஓர் நாள் என்னிடம் அவள் மௌன மொழியிலாவது பேசிவிடமாட்டாளோ என்பதற்காக!
#கடவுள் நம்பிக்கையை விடுத்தேன் - ஏன்?
என்னையும் அவளையும் கைகோர்த்திட வழி செய்யவில்லை என்பதற்காகவா?
இல்லை,
அவள் இல்லாத என் வாழ்வை தனித்தே வாழ தன்னம்பிக்கை கொடுத்ததற்காக!
#என் எண்ணங்களை எழுத்துக்களாய் மாற்றினேன் - ஏன்?
என் எண்ணத்தில் அவளுக்கு இடம் கொடுக்க கூடாது என்பற்காகவா?
இல்லை,
இத்துணை நாள் என் எண்ணத்தில் மட்டும் நிறைந்த அவளை என் எழுத்துக்களாலும் நிறைக்க வேண்டும் என்பதற்காக!
உன்னுடையது மட்டும் தான் காதலா?,
இந்த உலகத்தில் யாரும் கண்டிடாத காதலா? என்று கேட்பீர்கள்!
ஆம்!
காதலியை இழந்த காதல் புறா(Love Bird) மரணிக்கிறதே அதைப்போல!
என்னை குற்றவாளி என்கிறார்களே,
இந்த குற்றவாளி கடந்து வந்த காதல் பயணத்தை சற்றே பின் நோக்கி நகர்ந்து பார்த்தால் நான் இழந்த என் காதலின் அர்த்தம் உங்களுக்கு புரியும்!
கேளுங்கள் என் கதையை,
Like, Comment செய்வதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்,
தமிழ் நாட்டிலே பிறக்க ஓர் ஊர்,
படிக்க ஓர் ஊர்,
பிழைக்க ஓர் ஊர்,
காதலை கடந்து செல்ல நான் மட்டும் என்ன விதி விலக்கா?
Facebook, Whatsapp, Messenger & Email இப்படி ஏதும் வேண்டாம் என்று என் phone'ஐ உடைத்து விட்டு வாழ்க்கையில் தனிமையை வாழ ஓடினேன், வாழ விட்டார்களா இந்த post'க்கு comment செய்வோர்கள்!
இதயத்தை கொடுத்து காதலை வளர செய்தது யார் குற்றம்?
இதயத்தை கொடுத்த இதயம் இல்லா அந்த கடவுளின் குற்றமா?
இதயத்தை என்னவளிடம் பறிகொடுத்த என்னுடைய குற்றமா?
இந்த குற்றத்திற்கு நீதி கிடைக்கும் வரை என்னை போன்றோரின் வாழ்க்கை வெறும் இப்படிப்பட்ட Facebook பதிவுகளாகவும், Watsapp Status'ஆகவும் தான் இருக்கும்!
$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:29 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 157

மேலே