கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்

கீழே வரும் வரிகள் பழைய தமிழ் திரைப்பட பாடல் ஒன்றின் ஸ்வரத்தில் அமைந்துள்ளது. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்..என்ற இந்த வரிகளைத்தவிர மற்ற வரிகளை நான் மாற்றி அமைத்துள்ளேன். பாடியும் உள்ளேன்.இதன் ஆடியோ என்னிடம் உள்ளது. நகைச்சுவையாக அமைக்கப்பட்ட இந்த பாடலில் வாழ்க்கையின் உண்மைகளும் ஓரளவுக்கு எடுத்து கூறப்பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் கவனிப்பீர்கள் .வாருங்கள், பாடலை படித்து பாடி மகிழலாம்.


கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்
அவன் வாழ்க்கை என்றால் என்ன என்று அறிய வேண்டும்
கடன் என்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பணம் என்றால் என்னவென்று உணர வேண்டும்

(கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்)

எத்தனை செல்போன் படைத்தான் எல்லோர்க்கும் ஒன்று கொடுத்தான்
தனக்கு மட்டும் மிக உயர்ந்த Apple போனை எடுத்துக் கொண்டான்( 2 தடவை)
நல்ல விஷயத்தை அவன் பார்த்து, திராபையை மட்டும் நமக்கு தந்தான்! (2 தடவை)
வாட்ஸ்அப்பைகொடுத்து விட்டு, உயரத்திலே தங்கிவிட்டான்!

(கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்)

அவனை அழைத்து வந்து, டிவி முன் அமர வைத்து
பாரடா, பாரு என்று பார்க்க வைத்து மகிழ்ந்திருப்பேன்( 2 தடவை)
பார்ப்பான், துடித்திடுவான், பார்த்ததே போதும் என்பான் (2 தடவை)
கடவுளவன் உலகத்தையே இல்லாமல் செய்திடுவான்..

கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்..அவன் வாழ்க்கை என்றால் என்ன என்று அறிய வேண்டும்..
கடன் என்னும் கடலினிலே மூழ்க வேண்டும்
அவன் பணமென்றால் என்னவென்று உணர வேண்டும்...

(கடவுள் மனதனாகப் பிறக்க வேண்டும்)

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (22-Jul-21, 11:40 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 173

மேலே