ஓட்டல் பூரியும் வீட்டு பூரியும்

ஓட்டல் பூரியும் வீட்டு பூரியும

தம்புடுவும் அவன் தந்தையும் ஒரு நாள் மாலை சிற்றுண்டி சாப்பிட என்று, ஒரு ஓடடலிற்குப் போனார்கள்.
இப்போதிலை, கொமு காலத்தில்!
அது என்ன கொ மு? கொரோனாவிற்கு முன்!

உடனே, "அப்பா,'எனக்குப் பூரிமசால் இப்பவே வேணும்" என்றான்.
அவன் தந்தை சப்ளையரிடம் "இரண்டு செட் பூரி மசால் கொடுப்பா" என்றார்.

ஆளுக்கு இரண்டு பூரிகள் இரண்டு செட்களாகச் சுடச் சுட வந்தன.உருளைக் கிழங்கு நிறைந்த பூரி மசாலும் ஒவ்வஒரு கோப்பை வந்தது.

இருவரும் மொறு மொறுவென்ற பூரி மசால் சாப்பிட்டுவிட்டு எழவும் சப்ளையர் ஒரு தட்டில் பில்லுடன் வந்து தந்தான்.பணத்தைக் கொடுத்து விட்டு வெளிவந்தார்கள்/

தம்புடு, தந்தையிடம், "ஏம்பா இந்த மாதிரி ஓட்டல் பூரி கிழங்கு ரண்டு சாப்ப்ட்டாலே வவுரு
கும்முணு ஆயிருது?" என்று கேட்டான்.
தந்தை, "அது அப்பீட்த்தாண்டா! கலப்பெண்ணயா இருக்கும். இல்லண்ணா, சோடா உப்பு ரம்பப் போடரதாலயா இருக்கும்!" என்றார்.
தம்புடு - "வீட்லெ, அம்மா சுடர பூரி கிழங்கு ஏளெட்டுத் தின்னாலும் மரிவிடி கேக்கத் தோணுதில்லியா? இது மட்டும் ஏம்ப்பா இப்பிடி வயிரு உப்பினாப்பில இருக்கு?" என்றான்.
தந்தை - " அட, சும்மா வாடா! வீட்டுக்குப் போயி அம்மாவக் கேளு போ!" என்று சிடுசிடுத்தார்.

வீட்டில் தாயைக் கேட்டான் தம்புடு. அவர், "அதுவாப்பா? நீங்க சாப்ட்டதும் சர்வர் பில்லு குடுத்தானில்லியா? அதுலெ மொத்தம் எவ்வளவு போட்டிருந்தான்?" என்று கேட்டார்.
தம்புடு, "இரநூத்தி எம்பது ரூவாம்மா!" என்றான்.
தாய், "ஆ! அதுதாம்பா காரணம்! நாலே நாலு பூரிக்கி,முன்னூறு ரூபா போட்டானில்லியா? அதப் பாத்துத்தா வயிரு உப்பிக்கிட்டுது!"

எழுதியவர் : செல்வப் ப்ரியா - சந்திர மௌ (22-Jul-21, 9:50 pm)
பார்வை : 95

மேலே