ஒரே ஒரு பழம்தான் சாப்பிட்டேன்
ஒரே ஒரு பழம்தான் சாப்பிட்டேன்!
பெரிய பொன்னான் - "ஆடேய் சின்ப் பொன்னா! ஓடிப் போயி ஒரு ஜிஞ்சர் சோடா வாங்கியாடா! வவுரு டம்முனு இருக்கு! அத்தோடெ கொஞ்சொ வலிக்குது!"
சின்ப் பொன்னான் - "ஏன்னுங்ணா திடீல்னு? என்னத்தத் தின்னீங்ணா? கெடாய்க் கரியா?"
பெரிய பொன்னான் - "அடப் போடா! இவனொருத்தன்! கெடாய்க் கரி உப்பெல்லா ஆரு போடராங்கொ? போயி மொதல்லெ சோடாவ வாங்கியாடா!"
சின்ப் பொன்னான் - "சேரீங்ணா! இத வாருங் ஒரே நிமிட்ல வாங்கியாரன்!"
பெரிய பொன்னான் ஜிஞ்சர் சோடாவைக் குடிக்கிறான்.
சின்ப் பொன்னான் - "உப்பச் சொல்லுங்ணா! என்ன தின்னீங்கொ?"
பெரிய பொன்னான் - "அதுரா, வவுரு அடிக்கடி போகுதுண்ணு நம்மு டாக்குட்டரு கிட்டப் போனனா, அவுரு "அன்னாடுமு ஒவ்வொரு பளஞ்சாப்புடுங்க, வவுரு செரியாயிரும்" அப்டீணாரு!"
சின்ப் பொன்னான் - "அது சேரிங்ணா! அவுரு சொன்னது நல்லதுதானொ? அப்பரொ ஏனுங் வவுரு டொம்முணு இருக்குதுங்ரீங்கொ?"
பெரிய பொன்னான் - "அதுதேந் தெரீலீடா சின்ப் பொன்னா! அவுரு சொன்ன மாதரயே ஒரே ஒரு பளந்தேந் தின்னண்டா!"
சின்ப் பொன்னான் - "என்ன பளம்ங்ணா!"
பெரீ பொன்னான் - " பெலாப் பளண்டா! ஒண்ணே ஒண்ணுதாண்டா தின்னேன்!"