செல்

" செல் "

கணவன்; - அடியே எங்கேடி  இங்கே வச்சிட்டுப்போன செல்லைக் காணோம்

மனைவி:-  அதானே...பார்த்தேன்...இது உங்க வேலைதானா;
டெய்லி ஒட்டடை அடிக்கிறேன்;
டெய்லி பெறுக்குகிறேன்;
டெய்லி தண்ணி ஊத்தி கழுவுறேன் தொடைக்கிறேன்;
இவ்வளவு சுத்தமாக வீட்டை வைத்திருக்கும் போது;
" செல் "எப்படி வந்ததின்னு யோசிச்சேன்; சன்னல் கதவெல்லாம்
ஆத்துப் போய் மாவாக  கொட்டுதே மக்கிப்போன மரப்பலகையாக இருக்குமோ என்று நினைத்தேன் ; இப்போது தானே தெரியுது  எல்லாத்தையும் நீங்க கொண்டுவந்து விட்ட  "செல் "தான் அரித்து மாவு மாவா கொட்டுகிறது  என்று; அதனால்  கூட்டி வாரி மண்ணெண்ணய ஊத்தி வத்திக்குச்சியை கிழிச்சி கொளுத்திப்புட்டேன்

கணவன்: - அடியே...பாவி......லூசுப் பொம்பளையா  நீ.... நான் வச்சேன்னு சொன்னது கைப்பேசியையடி ,  அதாவது மொபைல் போனைத்தான்,  "செல்"லுன்னு சொன்னேன்டி ; அதையா எண்ணெய்யை ஊத்தி நெருப்பு வச்சிட்டே , அதில் முக்கியமான நெம்பர் எல்லாம் வச்சிருந்தேனே எல்லாம் போச்சி, அதை வாங்கி  சரியா ஆறுமாசம் கூட ஆகலையே,  அதுவும்  கையில் பணம் இல்லாமல் ஈ.எம்.ஐ.ல வாங்கியது,  இன்னும் அதுவே கட்டி முடியலையே  மரியாதையாக உங்க அம்மா வீட்டுக்கு போய் போன் வாங்கி கொடுக்கச்சொல்லி வாங்கிக்கொண்டு வாடி...போடி

மனைவி :- ஏய்  லூசு...நானா லூசு...நீ  தான் லூசு நான் கொளுத்தினது  "செல்"லை, அதாவது கரையானை,  உன் வீட்டு கரையானை போக்க  என் வீட்டில் உனக்கு ஃபோன் வாங்கி வரனுமா  நல்லா இருக்கு கதை

கணவன்;- .........!!! 

மனைவி : - ரிங்கு  அடிக்கிறது  அது எங்கே அடிக்கிறது நீ  கழட்டி மாட்டி இருக்கும் உன்னோட  சட்டைப்பையில் அடிக்கிறது

கணவன்: - சாரி......மா....

மனைவி;-   ம்.....ஏதாவது  ஞாபகம் மறதியா எதையாவது எங்கேயாவது வச்சிட்டு என் கழுத்தை அறுக்கிறதே பொழப்பாப் போச்சி இவருக்கு;  இனி மேல் எங்கேயும் என்னை கூப்பிடாதீங்க ;  நான் ஓங்கூட வருவதாக இல்லை

கணவன்:-  நீ  வரவில்லை என்றால்  விட்றுவோமா ;  நான்  செத்தாத்தான்  என் கூட  உன்னை  கூட்டிக்கொண்டு  போகமுடியாது

மனைவி:-  யோவ்...வாயைக்கழுவு  என்ன  பேச்சு பேசுறே நீ......என்னை  பொம்மனாட்டியா  இருக்க விடு போதும்;  கம்மனாட்டியா  ஆக்கிவிட்டு போறேன் என்கிறே

கணவர்:-  அதுக்கு இல்லை  ஏம்மா.....ஏன்... வரமாட்டே

மனைவி:-   ஏன்னா  என்னையும் எங்கேயாவது  மறந்து விட்டுவிட்டு வரமாடேன்னு என்ன நிச்சயம்

கணவன்:- .........!!!


ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-21, 9:51 am)
பார்வை : 46

மேலே