முதுமை தேடுது முற்றுப்புள்ளி

மூப்பு விரட்டுது;
முதுமை முடிவைத்தேடுது;
முந்திநிற்குது நறை;
முயலாமை இயலாமை ஆகுது,
முகம் எல்லாம் சுருங்கிக் கிடக்குது;
முன்வந்தே விடைக்கிது கோபம்;
மறதிக்கு இல்லை மருந்து,
மறைக்க முடியவில்லை முதுமையை;
மனசுக்குள் எத்தனை நினைப்புகள்,
பொசுங்கி பொசுங்கி கிடக்குது முதுமையில்;
முடங்கி முடக்கி கிடத்துது முதுமை;
முக்காடு போட்ட வெட்கம் முழுசா களையுது;
மூச்சே வாங்குது;
பிழிந்தெடுக்கும் பிரிவு,
பயம் சுமக்கும் பரிவு;
நொந்து போகவைக்கும் தனிமை;
நொடிக்கு நொடி பயம்;
நோகடிக்கும் மனசு;
தடுக்கி விழுந்த காயங்கள்;
தள்ளாடும் உடல்;
தயக்கம் தடுமாறவைக்கிது;
தள்ளாமை சொல்லாமல் வருகிறது;
அடிஎடுத்து வைக்க தடியைத்தேடுது;
அள்ளிப்பருக கைகள் நடுங்குது;
வேட்கை தீர்ந்தது வேடிக்கைப் பார்க்குது;
யாக்கை போராடுது;
யாருக்கும் பிடிக்காமல் போனது;
வயோதிகம் வந்தே வழக்காடுது;
வாழ்க்கை இருட்டாகுது;
வழுக்கி விழுந்தே ரணமாகுது;

கருகிக் காய்ந்த சரீரமது;
கண்ணீரே சிந்துது
கண்கள் மூக்குக் கண்ணாடியைத்தேடுது;
உதவிக்கு ஆட்களைத்தேடுது;
உருகித் தவிக்கிது பாசத்திற்கு;
உருத்தும் நினைவுகள்;
உறவாட உறவைத்தேடுது;
உறங்க கண்கள் தவிக்குது;
ஓடிய இரத்தம்
உறைந்திடப்பார்க்குது;
அடிக்கும் இதயம் அடம் பிடிக்கிது;
அடிக்கடி நீரும் போகுது
பிடித்த உடம்பில் பித்தம் ஏறுது;
பிடிவாதமே வந்து மனதில் தங்குது;
முதுமை முதியோர் இல்லத்துக்கு
தள்ளுது;
இருகிப்போன இதயமது;
இருக்கமாக இருக்குது;
இருட்டிய கண்கள்,
இடுப்பில் நிற்காத சொக்காய்;
எடுப்பு இல்லாத முகம்;
எட்டுவைக்க முடியாத கால்கள்;
அக்கடா என்று உட்கார நினைக்கும் உடம்பு;
ஆசையைத்தீர்க்க,
தீனி திண்ண முடியாத உடைந்த பற்கள்;
தொல தொல உடம்பு;
தொங்கும் தோல்கள்;
தொல்லைகொடுக்கும் இருமல்;
தொன தொனப்பேச்சி;
தொந்தரவு என்று நினைக்கும் உறவு;
ஜீவன் இல்லாத வார்த்தை;
ஜீரணம் ஆகாத வயிறு;
ஜுவிதம் இல்லாத வாழ்க்கை;
முழுதாய் தெரியாத கண்பார்வை;
மூச்சிவாங்கியே எழத்தவிக்கும் உடம்பு;
மூட்டுக்கு என்ன முனைப்போ,
முடிக்கிவிட்டது நடையை;
முட்டிக்கால் போட்டே
முன்கையின் உதவியுடன் முனகியே எழத்தவிக்கும் வயது;
சிறிதளவு பேசுவதற்குள்,
சிடு சிடுப்பு பெத்த பிள்ளைகளிடமிருந்து ,
காதில் விழாமல்,
கடு கடு கோபம்;
தவி தவிக்கும்,
தனிமை நோயின் தாக்கம்;
தாங்க முன்வராத கரங்கள்;
தள்ளாத வயது;
செல்லாத காசாய்ப்போன உடம்பு;
சல்லடை சல்லடையான துழைத்த நம்பிக்கை;
சீக்கிரம் விழத்துடிக்கும் வாழ்க்கை;
சிறுகுழந்தையாய் மாறிய முதுமைப்பருவம்;
முதுமையை தாங்கும் விடுதி முதியோர் இல்லம்;
முதுமைக்கு வேண்டாம் முக கவசம்;
முதுமைக்கு கேடு தனிமை;
முதுமை நாடுவது பேச்சி துணை பேச்சிக்கு துணை;
முதுமை தேடுது முற்றுப்புள்ளி  

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (28-Jul-21, 11:35 am)
பார்வை : 1052

மேலே