அறுசுவையை மிஞ்சும் சுவை எது

அதிகாலையில் நாக்கு தேடும் சுவை, சூடான பில்டர் காபி சுவை
குளித்தபின் நாக்குக்கு தேவையான சுவை, சிற்றுண்டி சுவை
அலுவலகத்தில் பதினோரு மணிக்கு நாக்கு கேட்பது தேநீரின் சுவை
மதியம் ஒரு மணிக்கு நாக்கு எதிர்பார்ப்பது கொஞ்சம் உணவின் சுவை
பிற்பகல் மூன்று மணிக்கு நாக்கு வேண்டுவது காபியின் சுவை
மாலை ஐந்து மணிக்கு நாக்கு தேடி ஓடுவது நொறுக்கு தீனி சுவை
மீண்டும் ஆறு மணிக்கு நாக்கு சுவைக்க விரும்புவது காபி சுவை
இரவு ஒன்பது மணிக்கு நாக்கு ருசிக்க விரும்புவது இரவு உணவு
இதுபோல நாக்கு விதவிதமான சுவைகளை ரசித்து மகிழ்கிறது
ஆனாலும் எந்நாளும், எந்நேரத்திலும், அலுக்காமல் இருக்கும் சுவை
அது நாம் நம்மை மறந்து வயிறு வலிக்க சிரித்து மகிழும் நகைச்சுவை
ஒருவேளை காப்பியின் சுவையை இழக்கலாம், இன்னொரு முறை
ஒரு வேளை உணவின் சுவையை இழக்கலாம், அது பரவாயில்லை
ஆனால் எப்படி காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்கிறோமோ அதுபோல
நகைச்சுவை எப்போதெல்லாம் அமைகிறதோ, அப்போது அதனை
களங்கமில்லாமல் வரவேற்று ,குலுங்க சிரித்து, ரசிக்க வேண்டும்..

நகைச்சுவை உணர்வின்றி ஒரு நாள் கடந்தால்
அது பசியின்றி உணவு உண்ணுவதற்கு சமம்

(சிலர் கூறுகின்ற நகைச்சுவைகள் நமக்கு அழுகையை வரவழைக்கும்.
அப்போதெல்லாம் அழுதுவிட்டு போங்க. அழுவதும் உடலுக்கு நல்லது தானே)

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (29-Jul-21, 9:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 169

சிறந்த நகைச்சுவைகள்

மேலே