இனிப்பு சாப்பிட்டாதான் உண்மையான களிப்பு

காலை மாவு கோலம் இட்டு, மதியம் வாயில் போட்டுக்கோ பப்பர்மிட்
தொண்டை இளைப்பாற தேன்பாகு, வயிறு களித்திட மைசூர்பாகு
கோடியாய் பணம் இருந்தா வில்லா வாங்கு இல்லாட்டி ரசகுல்லா
கேரளாவில் கொழாபுட்டு நம்ம ஊரில் நெய் முந்திரி ரவா லட்டு
சின்ன புள்ளைக்கு தான் நர்சரி பெரியவங்களுக்கு ரவா கேசரி
மத்த நாளில் வெறும் மிளகு ரசம், பண்டிகை நாளில் அதிரசம்
அஜீரணமா? எள்ளுருண்டை; இல்லையா? கடலை உருண்டை
அமாவாசை அன்று பருப்பு பாயசம், காசிருந்தால் பால்பாயசம்
நீ திருடனை கண்டா ஓடி பிடி, பிடிச்சிட்டா உனக்கு சோன்பப்புடி
கடன்காரன் துரத்தினா ஓடி ஒளி, தப்பிச்சா உனக்கு வெல்லபோளி
பயறு போட்டா பொங்கல் வெல்லம் போட்டா சர்க்கரை பொங்கல்
ஹனிமூனுக்கு போய்வா கோவா, அதன்பின் இருக்கு பால்கோவா
அரசாங்கத்துக்கு கட்டு கப்பம், மீதியில் சுட்டு சுவைத்திடு அப்பம்
உன் மன ராஜ்யத்தில் நீதான் பாதுஷா, அப்போ ருசித்திடு பாதுஷா
கஞ்சன்னா உலோபி, இல்லாட்டி காசு கொடுத்து சுவை ஜிலேபி
வேலை இருந்தா வண்டியை கட்டு, இல்லாட்டி சப்பு கமர்கட்டு

ஆனந்த ராம்

எழுதியவர் : (4-Aug-21, 12:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 204

மேலே