முன்னெச்சரிக்கை முருகேசனும் வக்கீலும்

முன்னெச்சரிக்கை முருகேசனும் வக்கீலும்.

ஒரு சிறிய கொலை முயற்சி வழக்கில் முன்னெச்சரிக்கை முருகேசனும் (மு மு) சாட்சியாக இருக்கவேண்டி நேர்ந்து விட்டது!
"விதியே! எஞ்சிவனே!" என்று அதற்காக நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருந்தான்.
வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இன்று, முருகேசனின் சாட்சியம்.
அதில் அரசுத் தரப்பு வக்கீல் அறவாணன் (அ அ), அவனைக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருக்கிறார்.

அ அ - "முருகேசன், சம்பவம் நடந்த போது நீங்கள் எங்கிருந்தீர்கள்?"
மு மு - "வேறெங்கே? சம்பவ இடத்திற்கு அருகிலேயேதான்!"
அ அ - "அந்த இடத்தில் எதற்கான நின்று கொண்டிருந்தீர்கள்?"
மு மு - "அதுதான் முன்பே சொன்னேனே! அந்த ஆள் ராமனைப் பார்க்கச் சென்றிருந்தேன்!"
அ அ - "பார்த்தீர்களா? எப்படி இருந்தார்?"
மு மு - "பார்த்தேன் பார்த்தேன். எப்போதும் போல அசடு வழிந்து கொண்டு இருந்தார்!"
அ அ - "இருவரும் ஏதேனும் பேசிக் கொண்டீர்களா?"
மு மு - "இல்லையே! அவருடன் அந்த ஆள் குருநாதன் பேசிக் கொண்டிருந்தார்"
அ அ - "ஏன்ன பேசிக் கொண்டிருந்தார?"
மு மு - "நான் கவனிக்கவில்லை!"
அ அ - "அப்புறம் எதற்கு அங்கு நின்று கொண்டிருந்தீர்கள்?"
மு மு - "அதுதான் முன்பே சொன்னேனே! அந்த ஆள் ராமனைப் பார்க்கச் சென்றிருந்தேன்!"
அ அ - "அது சரிதான்! அப்புறம் அவர்களுக்கு இடையில் எப்போது அடிதடி மூண்டது?"
மு மு - "நான் கவனிக்கவில்லை!"
அ அ - "அது சரிதான். யார், யாரை அடித்தார்கள்?"
மு மு - "நான் கவனிக்கவில்லை. நான் பார்த்தபோது ராமன் கீழே கிடந்தார்!"
அ அ - "அது சரிதான். ஏன் கவனிக்கவில்லை? அங்குதானே நின்றிருந்தீர்கள்?"
மு மு - "அங்கில்லை ;கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தேன்"
அ அ - "இந்த மாதிரி, கொஞ்சம் என்றெல்லாம் மொட்டையாகச் சொன்னால் தவறு. சரியாகச் சொல்லுங்கள்!"
மு மு - "அப்படியா! சரி. ராமன் கிடந்த இடத்திலிருந்து சரியாக நேர் கிழக்கில், நாநூற்று முப்பத்தேழு அடி, பதினோரு அங்குலம் தூரத்தில் நான் நின்று கொண்டிருந்தேன்!"
அ அ - "அதெப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறீர்கள்?"
மு மு - "எனக்கு அப்போதே தெரியும். இந்த வழக்கில் நான் சாட்சியாகப் போனால் எவனாவது ஒரு வேலையில்லாத கூமுட்டை முட்டாள் வக்கீல் இந்த மாதிரிக் குறுக்குக் கேள்வி கேட்பான் என்று! அதனால் அப்போதே உடனடியாக சரியாக அளந்து குறித்து வைத்துக்கொண்டேன்!"

---- செல்வப் ப்ரியா-சந்திர மௌலீஸ்வரன் மகி
05 ஆகஸ்ட் 2021/

எழுதியவர் : செல்வப் ப்ரியா-சந்திர மௌல (5-Aug-21, 11:26 pm)
பார்வை : 128

மேலே